search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி உ.பி. மக்களை இழிவுபடுத்தியதை கண்டிக்கிறேன்: பா.ஜ.க. எம்.பி.
    X

    ராகுல் காந்தி உ.பி. மக்களை இழிவுபடுத்தியதை கண்டிக்கிறேன்: பா.ஜ.க. எம்.பி.

    • உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
    • ராகுல் காந்தியின் இந்தக் கூற்றுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் நடைபயண யாத்திரை தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

    அமேதியில் நேற்று நடந்த யாத்திரையில் அவர் பேசுகையில், வாரணாசிக்கு சென்றபோது இரவில் வாத்தியங்கள் முழங்குவதை பார்த்தேன். உ.பி.,யில் மாணவர்கள் போதையில் சாலையில் கிடந்ததைப் பார்த்தேன். உத்தர பிரதேச மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் இருக்கின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக்கூட பார்க்கமுடியாது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், இது மிகவும் வேதனையானது. ராகுல் எப்போது கற்றுக் கொள்வார்? உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என்று அவர் எப்படி கூறினார்? மக்களை இழிவுபடுத்துவதை நான் கண்டிக்கிறேன். சந்தேஷ்காலி கிராமத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இன்னும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×