என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்ததில் பாஜக பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி
    X

    சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்ததில் பாஜக பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி

    • 2014-க்கு முன்பு, சுமார் 25 கோடி மக்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
    • ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளது

    இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த நாளான இன்று, இந்திய பிரதமர் மோடி லக்னோவில் ராஷ்டிர பிரேர்னா ஸ்தல்-ஐ (சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் நினைவுச் சின்னம்) திறந்து வைத்தார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் வாய்ப்பு எங்கள் அரசு கிடைத்ததில் பாஜக பெருமை கொள்கிறது.

    சுதந்திரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு நேர்மறையான சாதனையையும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சொந்தமாக்கும் ஒரு போக்கு எவ்வாறு உருவானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    2014-க்கு முன்பு, சுமார் 25 கோடி மக்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தனர், ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு காரிடார், பாதுகாப்பு உற்பத்திக்கு உலக அளவில் அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×