என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
- பூபேந்தர் யாதவ் பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்
- அஷ்வினி வைஷ்ணவ் துணை பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில் விரைவில் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. பூபேந்தர் யாதவ் பொறுப்பாளராகவும், அஷ்வினி வைஷ்ணவ் துணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் மற்றும் பிப்லாப் குமார் தேவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலத்தில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவ சேனா (ஏக் நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி எம்.பி. தேர்தலில் 48 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறது.
இதனால் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணி சிறப்பான வகையில் வியூகம் அமைக்க விரும்பும்.
சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஜார்கண்ட் மாநில பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளனர். ஜி. கிஷண் ரெட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பொறுப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.






