search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்- பா.ஜ.க, காங்கிரஸ் தலா 2 தொகுதிகளில் வெற்றி
    X

    5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்- பா.ஜ.க, காங்கிரஸ் தலா 2 தொகுதிகளில் வெற்றி

    • பீகார், உ.பி.,யில் தலா ஒரு தொகுதிகளை பா.ஜ.க வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதியை தக்கவைத்தது.

    புதுடெல்லி:

    பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    உ.பி.,யின் ராம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, சமாஜ்வாதி வேட்பாளர் ஆசிம் ராஜாவை 33,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சமாஜ்வாதி கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியை பா.ஜ.க முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

    இதேபோல், உ.பி.,யின் கதவுலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் மதன் பையா, பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமார் சைனியை 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    பீகாரில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கேதார் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் சிங்கை 76,653 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஒடிசாவின் பதம்பூர் தொகுதிக்கு போட்டியிட்ட ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியின் பர்சா சிங் பரிகா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை 38.252 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ...

    சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பனுபிரதப்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி வெற்றி பெற்றார்.

    ராஜஸ்தானின் சர்தர்ஷகார் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா 26,852 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அசோக்குமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    Next Story
    ×