என் மலர்
இந்தியா

சரியான நேரம் வந்துவிட்டது: மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என நம்புகிறேன்- உமர் அப்துல்லா
- சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன.
- அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை மேற்கொண்டேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா சரியான நேரம் வந்துவிட்டது, மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
சரியான நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நினைக்கிறோம். சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன. அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். ஜம்மு-காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது.
இவ்வாறு அப்துல்லா தெரிவித்தார்.
Next Story