என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்- தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி  நிபந்தனை
    X

    'எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்'- தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி நிபந்தனை

    • போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
    • எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.

    கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்" என்றும் தேர்தல் தோல்விக்கு ஆணையத்தை குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி,

    "அன்புள்ள தேர்தல் ஆணையம், நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல.

    உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.

    மகாராஷ்டிரா உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மாகாரஷ்டிர வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிட வேண்டும்.

    கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Next Story
    ×