search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் இன்று அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்பு
    X

    பெங்களூருவில் இன்று அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்பு

    • கர்நாடகாவில் பிரதமர் மோடி 2 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    • கடந்த தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

    கர்நாடகாவில் பிரதமர் மோடி 2 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவும் இன்று பெங்களூருவில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நேற்றிரவு அவர் பெங்களூருவுக்கு வந்தார். இன்று அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து சிக்கபள்ளாப்பூர், தும்கூர், தாவாங்கேரே, சித்ரதுர்கா, பிதார், பெல்காம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பெங்களூரு ஊரக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னப்பட்டிணத்தில் அமித்ஷா ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். அமித்ஷாவுடன் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமியும் பங்கேற்கவுள்ளார். கடந்த தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து இம்முறை முதல் வெற்றி இங்கிருந்து தொடங்கவேண்டும் என்ற அடிப்படையில் அமித்ஷா தனது பிரசாரத்தை கிராமப்புறங்களில் இருந்து தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.

    Next Story
    ×