என் மலர்
இந்தியா

எல்லை, விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து உளவுத்துறை இயக்குனர் உள்பட உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
- LoC-யில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கதல்.
- விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள மாநிலங்களில் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் எல்லை மற்றும் விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிஸ்எஃப், சிஐஎஸ்ஃப் டைரக்டர் ஜெனரல்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து உளவுத்துறை இயக்குனருடன் ஆலோசனை நடத்தினார்.
எல்லை பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.






