என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்க..! அமித் ஷாவிடம் இருந்து முதல் அமைச்சர்களுக்கு பறந்த போன் கால்..!
    X

    பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்க..! அமித் ஷாவிடம் இருந்து முதல் அமைச்சர்களுக்கு பறந்த போன் கால்..!

    • பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு.
    • ஏப்ரல் 27ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்களுடன் அமித் ஷா பேசியுள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.

    இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. முக்கியமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது. வாகா எல்லை மூடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநில அரசுகளும், அந்தந்த மாநிலத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுக்கும் போன் செய்துள்ளார்.

    அப்போது காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேற்றப்படுவார் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×