என் மலர்
இந்தியா

பெங்களூரு சாலைகளில் உள்ள பள்ளங்கள் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவு
- பெங்களூரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக பெரும்பாலானோர் குற்றச்சாட்டு.
- அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்தியாவிலேயே போக்குவரத்து மிகுந்த நகரமாகும். இங்குள்ள சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்தில்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பெங்களூருவை சுற்றி ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுத்தின் தலைவர்கள் மோசமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ளனர். சில நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறுவதாகக் கூட தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெங்களூரு சாலை பள்ளங்கள் நிரப்பப்பட வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு பெருநகர ஆணையத்தின் தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ், கூடுதல் தலைமை செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை துஷார் கிரிநாத் ஆகியோ் உள்ள அரசு அதிகாரிகளிடம பேசியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பள்ளங்களும் சரி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.
மழையால் பள்ளங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதான் பிரச்சினை. இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளது. நாங்கள் பள்ளங்களை நிரப்புவோம். பெரும்பாலான இடங்களில் ஒயிட்-டாப்லிங் பணியை மேற்கொள்வோம். இது சாலையை பள்ளமாக்குவதில் இருந்து பாதுகாக்கும்.
எம்.எல்.ஏ.-க்களுக்கு அவர்களது தொகுதி மேம்பாட்டிற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நகர் மற்றும் கிராமப்புற எம்.எல்.ஏ.-க்களுக்கும் கொடுக்கப்படும். ஏனென்றால், நாங்கள் ஆல்-ரவுண்ட் வளர்ச்சியை விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.






