search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    15 இடங்கள் மட்டுமே... மேலும் ராகுல் காந்தி நடைபயணம்: கண்டிசன் போடும் அகிலேஷ் யாதவ்
    X

    15 இடங்கள் மட்டுமே... மேலும் ராகுல் காந்தி நடைபயணம்: கண்டிசன் போடும் அகிலேஷ் யாதவ்

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • 15 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என அகிலேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்.

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்- மற்ற கட்சிகள் இடையிலான இடங்கள் பங்கீடு தொடர்பான இடியாப்ப சிக்கல்தான்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரஸ்க்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. அம்மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ்க்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியதாக கூறப்பட்டது.

    ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது.

    இந்த நிலையில் 15 இடங்களுக்கு மேல் ஒன்று கூட அதிகமாக கொடுக்க முடியாது. இதை ஏற்றுக் கொண்டால்தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிசன் போட்டதாக தெரிகிறது.

    இதனால் இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவ் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி 2019-ல் நாடு முழுவதும் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்தி பேசும் மாநிலங்களில் அதன் வெற்றி மிகவும் குறைவாகும். உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும்தான். அமேதி தொகுதியில் கூட ராகுல் காந்தி தோல்வயிடைந்தார். இதனால் அகிலேஷ் யாதவ் இறுதியாக 15 இடங்களுக்கு மேல் கொடுக்க மறுத்து வருகிறார்.

    மகாராஷ்டிராவில் சரத் பவார்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×