என் மலர்tooltip icon

    இந்தியா

    இனி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார் திட்டவட்டம்
    X

    இனி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார் திட்டவட்டம்

    • மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
    • அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

    எங்களின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடைகிறோம். தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

    வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×