என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விபத்தில் தப்பிய தனியொருவர்: ராசி நம்பராக மாறிய 11A இருக்கை- முன்பதிவுக்கு முந்தும் பயணிகள்
    X

    அகமதாபாத் விபத்தில் தப்பிய தனியொருவர்: ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை- முன்பதிவுக்கு முந்தும் பயணிகள்

    • விமானம் புறப்பட்ட சில நொடிகளில் வேகமாக குலுங்கியது.
    • அடுத்த சில வினாடிகளில் புகை சூழ்ந்து கொண்டு விமானம் உடைந்து நொறுங்கியது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

    விமானம் விழுந்த வேகத்தில் அதில் இருந்த எரிபொருள் வெடித்ததால் இந்த விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கருதிய நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய வம்சாவழியை சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதான விஸ்வாஸ்குமார் என்ற தொழிலதிபர் மட்டும் விபத்தில் தப்பியது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    விஸ்வாஸ்குமார் கூறுகையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் வேகமாக குலுங்கியது. விமானிகளின் நடுங்கும் குரல் கேட்டது. அடுத்த சில வினாடிகளில் புகை சூழ்ந்து கொண்டு விமானம் உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு எதுவும் தெரியவில்லை என்று கூறி உள்ளார்.

    உயிர் பிழைத்த விஸ்வாஸ்குமார் அமர்ந்திருந்த 11 ஏ இருக்கை எப்போதுமே அதிர்ஷ்டமான இருக்கை என்ற அடையாளத்தை பெற்றுள்ளது.


    இந்த இருக்கை போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்த ஜன்னலுக்கு அருகே அமைந்திருக்கும். இது மற்ற இருக்கைகளை விட சற்று இடைவெளி அதிகமாக இருக்கும். அவசர கதவுக்கு மிக அருகில் இந்த இருக்கை இருக்கும்.

    மேலும் விமானத்தின் இறக்கை பகுதிக்கு அருகே இருக்கும். எனவே இது விமானத்தின் மிகவும் பலமான பகுதியாகவும் அமைந்திருக்கும். எனவே தான் அவசர காலங்களில் இந்த 11 ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர் மட்டும் வெகு விரைவாக விமானத்தில் இருந்து தப்புவதாக பெரும்பாலானோர் நம்புகின்றனர். தப்பிக்க வேண்டும் என்று நினைக்காவிட்டாலும் கூட இந்த கதவுக்கு அருகே வருபவர்களால் வேகமாக வெளியே செல்ல முடியும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் இந்த 11 ஏ இருக்கை எப்போதுமே அதிர்ஷ்டமான இருக்கையாக தொடர்கிறது.

    அகமதாபாத் விபத்தை பொறுத்தவரை 11 ஏ இருக்கை இருந்த இறக்கை பகுதி பலமாக இருந்ததால் அது சேதமடையாமல் உடைந்திருக்கிறது. அதன் வழியே விஸ்வாஸ்குமார் வெளியே குதித்து உயிர் தப்பி உள்ளார்.

    இந்நிலையில் விமானத்தில் 11 ஏ இருக்கை உலகம் முழுவதும் ராசியானதாக மாறி உள்ளது. இதனால் விமானத்தில் 11ஏ இருக்கையை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×