என் மலர்
இந்தியா

2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி: தொகுதி மாறுகிறார் சிசோடியா
- யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜா இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
- கட்சியில் இணைந்து உடனே முன்னாள் துணை முதல்வர் போட்டியிட்ட தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் அடுத்த வரும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
இந்த நிலையில் இன்று 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணிஷ் சிசோடியா அவருடைய தொகுதியை ஓஜாவிற்கு விட்டுக்கொடுத்துள்ளார்.
மணிஷ் சிசோடியா கடந்த தேர்தலில் பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது அந்த தொகுதி அவத் ஓஜாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜங்கபுரா தொகுதியில் மணிஷ் சிசோடியா போட்டியிட இருக்கிறார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி இன்னும் 39 வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்வில்லை.
ஜங்கபுரா தொகுதியில் 2013-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்தர் சிங் திர் வெற்றி பெற்றிருந்தார். மஹிந்தர் சிங் திர் பா.ஜ.க.-வில் இணைந்த பிறகு ஆம் ஆத்மி பிரவீன் குமாரை அந்த தொகுதியில் நிறுத்தியது. 2015 மற்றும் 2020 தேர்தில் பிரவீன் குமார் வெற்றி பெற்றார். இந்த முறை மணிஷ் சிசோடியாவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது.
டெல்லியின் கல்வி புரட்சியின் இதயமாக பட்பர்காஞ்ச் திகழ்கிறது. ஆசிரியரான ஓஜா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தபோது இந்த தொகுதிக்கு சிறந்தவராக இருப்பார் என நினைத்தேன் என மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.






