பீகாரில் கோர விபத்து- டிராக்டர் மீது ஜீப் மோதியதில் 8 பேர் பலி

டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் கோர விபத்து- டிராக்டர் மீது ஜீப் மோதியதில் 8 பேர் பலி
Published on: 

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று காலை டிராக்டர் மீது ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 31-ல் பஸ்ராஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே இன்று அதிகாலை 5.15 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் சிறந்த சிகிச்சைக்காக பாகல்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீப்பில் பயணித்தவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இறந்தவர்கள் கவுதம் குமார் (10), பிரகாஷ் சிங் (60), மோனு குமார் (11), அமன் குமார் (19), பூந்தி குமார் (22), அன்ஷு குமார் (22), வில்லோ குமார் (5) மற்றும் பல்து தாக்கூர் (5) என்றும்,

காயமடைந்தவர்கள் சச்சித் தாக்கூர், தர்மேந்திர குமார் மற்றும் குந்தன் குமார் என்றும் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com