என் மலர்tooltip icon

    இந்தியா

    நெடுஞ்சாலையில் லாரி மோதி  7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
    X

    நெடுஞ்சாலையில் லாரி மோதி 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்

    • 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் இப்ராகிம் பஸ் கிராமத்தில், டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலையில் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×