என் மலர்
இந்தியா

நிலுவையில் உள்ள 7 லட்சம் வழக்குகள்.. உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- விசாரணைக் கைதிகளை அவசரமாக ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது.
- 2024 ஆம் ஆண்டிற்கான 13 பரிந்துரைகளும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.
உயர் நீதிமன்றங்களில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சிறிய மாநிலங்களில் கூட அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை உடனடியாக இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் விசாரணைக் கைதிகளை அவசரமாக ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான மனுவின் நேற்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான நான்கு பரிந்துரைகளும், 2024 ஆம் ஆண்டிற்கான 13 பரிந்துரைகளும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி வழங்கப்பட்ட புதிய பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் மேலும் கூறியது.






