என் மலர்
இந்தியா

புனே கார் விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 5 பேர் பலி
- இந்தாப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மேடக் அருகே உள்ள நாராயண் கேட் பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் மும்பைக்கு காரில் சுற்றுலா சென்றனர். சுற்றலா முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
புனே அருகே உள்ள இந்தாப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய கார் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






