என் மலர்
இந்தியா

சென்னை, வதோதரா உள்பட 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
- சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
- சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று காலை 8.50 மணியளவில் வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனங்கள் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என தெரிய வந்துள்ளது.
இதேபோல் கோயமுத்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, குஜராத் மாநிலத்தின் வதோதரா விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் விமான சேவைகள் தாமதமாகின.
#WATCH | Gujarat: Security heightened at Vadodara Airport after a bomb threat email was received by the airport authorities. pic.twitter.com/5aTkZy1tEj
— ANI (@ANI) June 18, 2024