என் மலர்
இந்தியா

மேம்பால தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்ட 3 வாலிபர்கள் - பதறவைக்கும் வீடியோ
- இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று வாலிபர்கள் பைக்கில் ஒன்றாக சென்றனர். அவர்கள் வைசாக் - என்ஏடி மேம்பாலத்தில் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது மேம்பாலத்தின் மேலே வளைவில் திரும்பிய போது டிவைடரில் பைக் மோதி மூன்று வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தனர்.
கீழே விழுந்த வாலிபர்களை அங்குள்ள பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் பைக் ஓட்டி செல்லும் காட்சிகள் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பார்ப்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவர் மட்டுமே பைக்கில் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்து விதி இருக்கும் பட்சத்திலும், போலீசாரும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகிறது.






