என் மலர்

  இந்தியா

  சோனியா காந்தி, ராகுல் காந்தி
  X
  சோனியா காந்தி, ராகுல் காந்தி

  மே 16ல் பிரமாண்ட பொதுக்கூட்டம்... ராஜஸ்தானில் சோனியா, ராகுல் உரையாற்றுகிறார்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பானேஷ்வர் தாமில் புதிய பாலத்தை சோனியா காந்தி திறந்துவைத்து உரையாற்றுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  உதய்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கட்சியின் எதிர்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளை விவாதிக்கும் வகையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

  இதையடுத்து மே 16ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம் பானேஷ்வர் தாமில் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். முன்னதாக, புதிய பாலத்தை சோனியா காந்தி திறந்துவைப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  சோம், மாஹி மற்றும் ஜகாம் ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் பானேஷ்வர் தாம் அமைந்துள்ளது. இது பழங்குடியின மக்களின் புனிதத் தலமாகும்.
  Next Story
  ×