search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    செல்வாக்கில் வீழ்ச்சியை தொடர்ந்து வருமானத்திலும் கடும் சரிவை சந்தித்த காங்கிரஸ்

    ஒரே ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதால் அக்கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வரும் வருமானம் மற்றும் செலவு பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் 2020-21-ம் ஆண்டு கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் அன்பளிப்பு வருவாய் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் ஆவணங்கள் மூலம் அந்த கட்சிக்கு கிடைக்கும் வருமானம் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    2018-19-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.918 கோடி வருமானம் கிடைத்து இருந்தது. 2019-2020-ம் ஆண்டில் அது ரூ.682 கோடியாக குறைந்தது. இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டு இந்த வருமானத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.285 கோடி வருமானமே கிடைத்துள்ளது.

    ஒரே ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் செலவுத்தொகை காங்கிரசில் அதிகரித்தபடியே உள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 2020-21-ம் ஆண்டு ரூ.35 கோடி வருமானம் பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ரூ.12 கோடியே கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு அந்த கட்சிக்கு ரூ.109 கோடி வருமானம் கிடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா கட்சி 2020-21-ம் ஆண்டு எவ்வளவு நன்கொடை வாங்கி இருக்கிறது என்ற விவரம் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.


    Next Story
    ×