என் மலர்

  இந்தியா

  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
  X
  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

  கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னை திரும்புகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  புதுடெல்லி:

  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர் நேற்று மாலை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

  அப்போது அவர் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரச்சனை தொடர்பாக பேசியதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இன்று கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இன்றும், நாளையும் அவர் டெல்லியில் தங்குகிறார். மேலும் அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

  தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (சனிக்கிழமை) இரவு சென்னை திரும்புகிறார்.

  Next Story
  ×