search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு
    X
    உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

    பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய அணி: உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

    உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று இன்று மும்பை சென்ற சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.
    மும்பை:

    தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

    அதன் ஒரு பகுதியாக அவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை மும்பையில் இன்று சந்தித்து பேசினார். 

    உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர்களுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

    உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று இன்று மும்பை சென்ற சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய அளவில் கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ் உடனிருந்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேச உள்ளார்.

    பா.ஜனதாவின் கொள்கைகளுக்கு எதிராக சந்திரசேகர ராவ் நடத்தும் போராட்டத்துக்கு உத்தவ் தாக்கரே முழு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×