என் மலர்

  இந்தியா

  ஜோதிமணி
  X
  ஜோதிமணி

  பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் தேச விரோத சக்திகள். அவர்களுக்கு எதிராக நிற்பதுதான் தேசப்பற்று என நான் நினைக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
  புதுடெல்லி :

  காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவித்துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவர்கள் அல்லாத பலபேர் மாணவியை விரட்டும் காட்சியை நாம் பார்த்தோம். இந்த காட்சி, இந்தியா முழுவதும் தீப்பிடித்ததுபோல பரவியுள்ளது. இது தமிழகத்துக்கு வந்துவிட ரொம்ப நாள் ஆகிவிடாது.

  பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் வடமாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என்று பலபேர் என்னிடம் தெரிவித்து உள்ளனர். தென் மாநிலத்துக்கு தற்போது வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் இப்படி நடக்கவில்லை. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும்.

  இந்த சம்பவத்துக்கு ஆளான பெண் போல, எல்லா பெண்களும் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் துணிவோடு எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை காக்க முடியும். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் தேச விரோத சக்திகள். அவர்களுக்கு எதிராக நிற்பதுதான் தேசப்பற்று என நான் நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×