search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாட்னா உயர்நீதிமன்றம்
    X
    பாட்னா உயர்நீதிமன்றம்

    மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் 7 பேர் இடைநீக்கம்- பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி

    பீகாரில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களின் ஏழு நீதிபதிகள் மீது பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
    பீகாரில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் முக்கிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

    இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெனரல் அருண் குமார், ககாரியா, மதுபானி, கதிஹார், பாங்கா, பாட்னா, ரோஹ்தாஸ் மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளுக்கு நேற்றைய தேதியிட்ட கடிதங்களை அனுப்பி, நீதித்துறை மற்றும் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்குமாறு உத்தரவிட்டார்.

    அதன்படி, ககாரியா குடும்ப நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ராஜ்குமார், ஜாஞ்சர்பூரில் அமைந்துள்ள மதுபானி நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி இஷ்ரதுல்லா, கதிஹார் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் செயலாளர் விபுல் குமார், பாட்னா மாவட்ட கூடுதல் நீதிபதி சத்ருகன் சிங், ரோஹ்தாஸ் மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமல் குமார், முசாப்பர்பூர் மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து பாட்னா உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு- ஆய்வில் தகவல்
    Next Story
    ×