search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி துணை மந்திரி மணீஷ் சிசோடியா
    X
    டெல்லி துணை மந்திரி மணீஷ் சிசோடியா

    கொரோனா பரவல் குறைந்தது-டெல்லி, குஜராத் மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

    கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
    நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்தது. இதேபோல், வரும் 14-ம் தேதி முதல் 1 முதல் 8-க்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தன.

    அதன்படி, டெல்லியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு வரை பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோரின் ஒப்புதல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் சில தனியார் பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளன.

    பள்ளி மாணவர்கள்

    மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் சில பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடினார்.

    இதேபோல் குஜராத் மாநிலத்திலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம்  வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

    இதையும் படியுங்கள்.. குண்டாப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி
    Next Story
    ×