search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    கொரோனா பரவல் குறைந்தது- கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

    கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது.

    கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

    பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது.

    ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பு நோயின் தாக்கம் மேலும் குறையும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பள்ளி, கல்லூரிகள் முன்பு மாநில சுகாதார துறையின் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    Next Story
    ×