என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
"தேர்வுக்கு தயாராவோம்" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அழைப்பு
ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை புரிந்துகொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
புது டெல்லி:
2022-ம் ஆண்டின் 'தேர்வுக்கு தயாராவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி ட்விட்டரின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியதாவது:-
பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அதனால்‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சியும் நெருங்குகிறது. மன அழுத்தமில்லாமல் தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்து நாம் பேசுவோம்.
தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் தேர்வு வீரர்கள் ஆவர். அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்த ஆண்டிற்கான ‘தேர்வுக்கு தயாராவோம் 2022’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு உங்கள் அனைவரையும் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி ஒரு அருமையான கற்றல் அனுபவம். நமது ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் இணைவதற்கும், அவர்களின் சவால்கள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் எனக்கு வாய்ப்பளிக்கிறது. கல்வி உலகில் மாறிவரும் நடைமுறைகளை கண்டறியவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story






