search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்- பெரும்பான்மை இடங்களை பிடித்தது திரிணாமுல் காங்கிரஸ்

    நாம் பெற்றுள்ள வெற்றி, மக்கள் நம் பக்கம் இருப்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 144 இடங்களில், 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 78 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓரு சில இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. 

    144 வார்டுகளை கொண்ட கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முனதினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 63.37% வாக்குகள் பதிவாகின.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 78 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓரு சில இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. 

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ’நாம் பெற்றுள்ள வெற்றி மக்கள் நம் பக்கம் இருப்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் எங்கே இருக்கின்றன என்பது கூட தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×