என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணையம்
    X
    ஆறுமுகசாமி ஆணையம்

    ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 

    சுப்ரீம் கோர்ட்

    ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் எனக்கூறிய நீதிபதிகள்,  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபணை இல்லை எனவும் தெரிவித்தனர். 


    Next Story
    ×