search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விலையை குறைக்க இதை செய்யுங்கள் - வைரலாகும் பெட்ரோல் பில்

    விலையை குறைக்க இதை செய்யுங்கள் எனும் வாசகம் அடங்கிய பெட்ரோல் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மும்பையின் விக்ரோலி பகுதியில் செயல்படும் ஹெச்பிஎல் விற்பனையாளர் வழங்கிய பெட்ரோல் பில் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தின் படி, பெட்ரோல் விலையை குறைக்க அடுத்த முறை நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனை ஒட்டி பெட்ரோல் விலையை குறைக்க, அடுத்த முறை நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள் எனும் வாசகம் அடங்கிய பெட்ரோல் பில்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    வைரல் புகைப்படத்தை ஆய்வு  செய்ததில், அது போலியான பில் என தெரியவந்துள்ளது. அரசு நிறுவனமான ஹெச்பிசிஎல் தனது விற்பனையகத்தின் பில் இந்த வடிவில் இருக்காது என உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் வைரலாகும் பில் உண்மையான ஒன்று இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×