search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பெங்களூருவில் மட்டுமே உயிரிழப்பு

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பெங்களூருவில் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 415 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 66 ஆயிரத்து 199 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று 322 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

    மாநிலத்தில் நேற்று வைரஸ் தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளது. 141 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5, 875 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    கர்நாடகத்தில் நேற்று அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெலகாவியில் 17 பேர், சித்ரதுர்காவில் 11 பேர், தட்சிண கன்னடாவில் 16 பேர், ஹாசனில் 10 பேர், கலபுரகியில் 14 பேர், குடகில் 11 பேர், மைசூருவில் 45 பேர், துமகூருவில் 17 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 3 பேர் இறந்தனர்.

    மற்ற 29 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை. பாகல்கோட்டை, கொப்பல், யாதகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று மாநிலத்தில் 18 ஆயிரத்து 746 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×