search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இணையதள காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்த இளைஞர் - சிறைக்கு சென்று திரும்பினார்

    இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க 2 ஆயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பறந்த இளைஞர் இறுதியில் சிறைக்கு சென்று திரும்பினார்.
    லக்னோ:

    பெங்களூரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்த 21 வயது இளைஞர் சல்மான். இவருக்கு, இணையதளத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. அந்தப் பெண் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி என்ற இடத்தில் வசித்தார். சல்மானுக்கும் சொந்த ஊர் உத்தரபிரதேசத்தில்தான் உள்ளது.

    இந்தநிலையில் காதலிக்கு பிறந்தநாள் வந்தது. இதுவரை இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க சல்மான் விரும்பினார்.

    காதலியை உடனே பார்க்கும் ஆவலில் விமான டிக்கெட் பதிவுசெய்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து சென்று லக்னோவில் இறங்கினார். அங்கிருந்து பஸ் பிடித்து காதலியின் கிராமத்தை சென்றடைந்தார். அவர் காதலிக்காக சாக்லெட்டுகள், டெடிபியர் கரடி பொம்மை மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கி சென்றிருந்தார்.

    அவர் காதலித்து வந்த பெண் சிறுமி ஆவார். அவளது பெற்றோருக்கு இவர் யாரென்று தெரியாததால் அவரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. மேலும் சந்தேகத்தின் பேரில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் போலீசார், சல்மானை அழைத்துச் சென்று காதலியின் பிறந்தநாள் இரவை போலீஸ் நிலையத்தில் கழிக்க வைத்தனர்.

    மறுநாள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.
    Next Story
    ×