என் மலர்

  செய்திகள்

  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்
  X
  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

  ’சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்’ - தமிழிசை சௌந்தரராஜன் டுவீட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
  ஐதராபாத்:

  சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

  இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

  நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

  ஹைதராபாத்  அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் . அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் ...பிரார்த்திக்கிறேன் @rajinikanth (ரஜினிகாந்த்)

  என பதிவிட்டுள்ளார்.


  Next Story
  ×