search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அனிகா
    X
    அனிகா

    கொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி

    கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்தற்காக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி: 

     அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிகா செப்ரோலு. இவருக்கு வயது 14. அவர், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ  பகுதியில் வசித்துவருகிறார். அவர், கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020-ம் ஆண்டுக்கான  இளம் விஞ்ஞானி விருதை வென்றுள்ளார். அவருக்கு 18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. 

    சிலிகோ முறையின் மூலம் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை  பிணைக்கலாம் என்ற சிகிச்சைமுறையைக் கண்டறிந்துள்ளார். 

    அதற்காகக்தான் அனிகாவுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘என்னுடைய  புராஜெக்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்பதை தெரிந்தவுடன் கடந்த இரண்டு தினங்களாக ஊடங்கள் இதன் மீது கவனம்  செலுத்தின. 

    நான் மற்றும் எல்லோரும் விரும்புவதைப் போல நம்முடைய கூட்டு நம்பிக்கை இந்த கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என்று  நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

    அவருடைய ஆராய்ச்சி, கொரோனா வைரஸைக் குணப்படுத்தக் கூடியது தொடர்பான ஆய்வு இல்லை. சிலிகோ முறையின் மூலம், இன்புளுயன்ஸா  வைரஸின் புரதத்தைக் பிணைக்கக்கூடிய தலைமை மூலக்கூறை கண்டறிவது தொடர்பானது. 

    ஆரம்பத்தில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் புரதத்துடன் பிணைக்கக்கூடிய ஒரு முன்னணி கலவையை அடையாளம் காண இன்-சிலிகோ  முறைகளைப் பயன்படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
    Next Story
    ×