search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சாம்பிள்
    X
    கொரோனா சாம்பிள்

    கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 9.50 கோடியை தாண்டியது -ஐசிஎம்ஆர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 8.59 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 1.52 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 88.26 சதவீதமாகவும் உள்ளது.

    கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 9.50 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 9,50,83,976 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 8,59,786 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
    Next Story
    ×