என் மலர்
செய்திகள்

வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
வெள்ள நீரில் மிதக்கும் போக்குவரத்து சிக்னல் - ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ
வெள்ள நீரில் போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் மிதக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகி வருகிறது.
போக்குவரத்து சிக்னல் மின்கம்பம் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மற்றும் ஐதராபாத்தில் கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக, ரூ. 5 ஆயிரம் கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், போக்குவரத்து சிக்னல் கம்பம் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பேஸ்புக், ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது சீனாவின் யுலின் நகரில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story