search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மநாபசாமி கோவில்
    X
    பத்மநாபசாமி கோவில்

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி மாத திருவிழா தள்ளிவைப்பு

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத திருவிழா தள்ளிவைக்கப்பட்டது.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தலைமை அர்ச்சகரான பெரிய நம்பி உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது தலைமை அர்ச்சகரான பெரிய நம்பி, கோவில் ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு 15-ந் தேதி வரை தடையும் விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், கோவிலில் தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகள் தந்திரி தரண நல்லூர் சதீசன் நம்பூதிரி தலைமையில் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பத்மநாபசாமி கோவில் ஐப்பசி மாத திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஐப்பசி திருவிழா தள்ளி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே திருவல்லம் பரசுராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் திருவிழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×