search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நேற்று 10.71 லட்சம் சாம்பிள்கள் சோதனை- இந்தியாவில் கொரோனா பரிசோதனை 5.62 கோடியாக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.71 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 78,586 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,02,596 ஆக அதிகரித்துள்ளது. 

    கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.62 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 5,62,60,928  சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,71,702 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×