search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இந்திய ரயில்வேயில் இப்படியொரு மாற்றம் செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல்

    இந்திய ரயில்வே துறையில் இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு குரல் கிளம்பி உள்ளதோடு, இதற்கு எதிரான போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், அதானி பெயர் கொண்ட கன்டெயினர் ரெயில் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவல்களில் ரெயில்வே பெயர் அதானி ரயில்வே என மாற்றப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் அவற்றில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்திய ரயில்வேயின் பெயர் மாற்றப்படவோ, ரயில்கள் எதுவும் அதானி குழுமத்திற்கோ விற்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    உண்மையில் அதானி குழுமம் உள்பட நாட்டின் 15 தனியார் நிறுவனங்கள் கன்டெயினர் ரயில்களை இயக்குவதற்கான உரிமத்தினை பெற்று இருக்கின்றன. இதற்கான உரிமம் 2006 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    கன்டெயினர் ரெயில்களை நாடு முழுவதிலும் இயக்குவதற்கான உரிமத்தை அதானி குழுமம் 2006 ஆம் ஆண்டு முதல் வைத்து இருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×