என் மலர்

  செய்திகள்

  பத்மநாபசுவாமி கோவில்
  X
  பத்மநாபசுவாமி கோவில்

  கொரோனா பரவல் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ஆராட்டு ஊர்வலம் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பங்குன மாத ஆராட்டு திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆராட்டு திருவிழா நடை பெறும். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பங்குனி மாத ஆராட்டு திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

  அந்த திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் 9-ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், 10-ம் நாள் விழாவில் ஆராட்டும் நடைபெறுகிறது.

  ஒவ்வொரு ஆண்டும் ஆராட்டு விழாவின் நிறைவு நாளில் ஆராட்டு ஊர்வலம் நடத்தப்படும். அன்று மாலை 5 மணிக்கு ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு சங்கு முகம் வரை நடைபெறும். அதில் நெற்றிப்பட்டம் சூடிய யானைகள் அணிவகுத்து செல்லும். சங்குமுகம் கடற்கரையில் சாமிக்கு ஆராட்டு நடைபெறும்.

  ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆராட்டு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆராட்டு விழா நிகழ்ச்சிகளை பத்மதீர்த்த குளத்தில் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  அதேபோல் பள்ளி வேட்டை நிகழ்ச்சிகளும் எளிமையாக நடத்தப்படுகிறது. ஐப்பசி மாத ஆராட்டு திருவிழா அக்டோபர் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

  கொரோனா காரணமாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 5 மாதத்திற்கு பிறகு கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×