search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    நியூசிலாந்து பிரதமர் இதற்கு தான் கோவிலுக்கு சென்றார் என கூறி வைரலாகும் வீடியோ

    நியூசிலாந்து பிரதமர் ஆக்லாந்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு இதற்கு தான் சென்றார் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று வந்த சம்பவம் செய்திகளில் வெளியானது. மேலும் அவர் கோவிலுக்கு சென்று வரும் வீடியோக்கள் பல்வேறு தலைப்புகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த வரிசையில், வைரலாகும் வீடியோ ஒன்று ஜெசிந்தா ஆர்டர்ன் நியூசிலாந்தை கொரோனா இல்லாத நாடு என அறிவித்த பின் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    2.54 நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோவில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு வெளியே காலணியை கழற்றிவிட்டு சென்ற அவர், பூஜையை ஆர்வமுடன் பார்த்த பின் ஆரத்தி காண்பிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

    வைரல் பதிவை ஆய்வு செய்ததில் ஆர்டர்ன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோவிலுக்கு சென்றதும், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அவர் கோவிலுக்கு சென்று வந்தார் என்பதும் தெரியவந்து இருக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்து பிரதமர் கோவிலுக்கு சென்றதற்கும் கொரோனாவைரஸ் பாதிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×