என் மலர்
செய்திகள்

மழை
கேரளாவில் அடுத்த மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
கேரளாவில் வருகிற 5-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி வருகிற 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இது தொடர்பான அறிகுறிகள் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்படுவதாகவும் கூறியிருந்தது. வானிலை மையம் தெரிவித்தபடி அந்தமான் பகுதிகளில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.
இந்த நிலையில் கேரளாவில் வருகிற 5-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு இயல்பான மழையே பெய்யும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு அருகில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது வலுவடைந்து சூறாவளிக்காற்றாக மாறி வடக்கு நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு மாநில அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story