என் மலர்

  செய்திகள்

  மும்பை மருத்துவமனை
  X
  மும்பை மருத்துவமனை

  3 டாக்டர்கள், 26 செவிலியர்களுக்கு கொரோனா- மும்பை மருத்துவமனையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையில் உள்ள வாக்ஹார்ட் மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
  மும்பை:

  இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை 4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 109 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரம் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்படுகின்றன.

  இந்நிலையில், மும்பை வாக்ஹார்ட் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 நர்சுகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

  மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ‘நெகடிவ்’ என பரிசோதனை முடிவு வந்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும். இதேபோல் புதிய நோயாளிகளும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
  Next Story
  ×