என் மலர்

  செய்திகள்

  வரி மோசடி
  X
  வரி மோசடி

  டெல்லியில் விமான, ஓட்டல் நிறுவனங்கள் ரூ.470 கோடி வரி மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் விமான, ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ரூ.470 கோடி வரி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
  புதுடெல்லி:

  ஊழியர்களின் வருமான வரிக்காக, சம்பளத்தில், குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. இது, டி.டி.எஸ். என அழைக்கப்படுகிறது. நேரடி வரிகள் பிரிவில் 40 சதவீத வசூல், டி.டி.எஸ். மூலமே கிடைக்கிறது.

  ஒரு குறிப்பிட்ட மாதத்துக்கு பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ். தொகை, அந்த மாதத்தின் இறுதியில் இருந்து 7 நாட்களுக்குள் மத்திய அரசிடம் செலுத்தப்பட வேண்டும்.

  இதில், டெல்லியில் உள்ள பெரு நிறுவனங்கள், முறையாக டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து, மத்திய அரசிடம் செலுத்துகிறதா என்பதை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள வருமான வரித்துறையின் டி.டி.எஸ். பிரிவு திட்டமிட்டது. இதற்காக, டெல்லியில் உள்ள பெரு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

  இதில், ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகள் நடத்தி வரும் ஒரு நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக வாடகையாக கிடைத்த ரூ.280 கோடிக்கு டி.டி.எஸ். செலுத்தவில்லை என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

  ஒரு விமான நிறுவனம், ரூ.115 கோடி டி.டி.எஸ். தொகையை செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ரூ.75 கோடி டி.டி.எஸ். தொகையை செலுத்தாததும் அம்பலமானது.

  சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

  இதற்கிடையே, வரி மோசடியில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கு டெல்லி கோர்ட்டு தண்டனை விதித்துள்ளது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மற்றொரு நிறுவனத்தின் அதிபருக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
  Next Story
  ×