என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது - குமாரசாமி
By
மாலை மலர்27 July 2019 4:38 PM GMT (Updated: 27 July 2019 4:38 PM GMT)

பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. மஜத எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவி சாய்க்க தேவையில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×