என் மலர்

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    டெல்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் - பிரதமர் மோடி தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அனைத்து முன்னாள் பிரதமர்களுக்காகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பற்றி பாராளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து முன்னாள் பிரதமர்களுக்காகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக முன்னாள் பிரதமர்கள் பற்றிய தகவல்களை அவர்களுடைய குடும்பத்தினர் அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

    மோடி தனது பேச்சின் போது காங்கிரசை மறைமுகமாக தாக்கினார். முன்னாள் பிரதமர்கள் பற்றிய நினைவுகளை மறக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிகள் நடந்ததாகவும் கூறினார்.

    ஐ.கே.குஜ்ரால், தேவேகவுடா, மன்மோகன் சிங் என்று அனைத்து முன்னாள் பிரதமர்களும் நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு இருப்பதாகவும், அதை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் மோடி தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
    Next Story
    ×