என் மலர்

  செய்திகள்

  செயற்கை மேகக்கூட்டமாக கருதப்படும் புகைப்படம்
  X
  செயற்கை மேகக்கூட்டமாக கருதப்படும் புகைப்படம்

  மழை பொழிய வைக்கும் நாசா இயந்திரம் - இந்தியாவிற்கு கொண்டுவர விரும்பும் அமிதாப் பச்சன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாசா உருவாக்கியிருக்கும் மழை பொழிய வைக்கும் இயந்திரத்தை உடனே இந்தியாவிற்கு கொண்டவர அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயற்கை மழையை பொழிய வைக்கும் இயந்திரத்தை கண்டறிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவுகிறது. 

  நாசாவின் புதிய இயந்திரம் செயற்கை மேகங்களை உருவாக்கி மிகக்குறைந்த நேரத்தில் மழை பொழிய வைக்கிறது. இத்தகைய இயந்திரம் இந்தியாவில் அவசர தேவையாக இருக்கிறது என ஃபேஸ்புக்கில் தகவல் பரவுகிறது. இதே தகவலை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சனும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

  அமிதாப் ட்விட்

  சமூக வலைதளங்களில் வைரலாகும் நாசாவின் மழை பொழிய வைக்கும் இயந்திரத்தின் வீடியோவில் பி.பி.சி. லோகோ இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவில் பேசும் நபர் நாசாவின் செயற்கை மேகம் உருவாக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் மழை பொழிய வைக்கிறது என தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. 

  வீடியோ முடியும் போது செய்தியாளர் மழையில் நிற்கும் காட்சிகள் வீடியோவின் உண்மைத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைகிறது. உண்மையில் நாசா மழை பொழிய வைக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ததில் சுவரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

  வைரல் வீடியோவில் மழை பொழிய வைக்கும் இயந்திரம் என கூறப்படுவதே முற்றிலும் பொய். உண்மையில் அது சோதனை ராக்கெட் ஆகும். நாசா சோதனை செய்த ராக்கெட் வீடியோ தான் பொய் தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் உண்மையான வீடியோ 2.52 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும்.

  ராகுல் பாண்டா முகநூல் பதிவு

  இந்த வீடியோ ஸ்பேஸ் ஷட்டில் ராக்கெட் பூஸ்டர் டெஸ்ட் எனும் தலைப்பில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிசிசிப்பியில் இருக்கும் நாசாவின் ஸ்டெனிஸ் விண்வெளி மையத்தில் RS-68 என்ஜின் சோதனை செய்யப்படும் வீடியோ ஆகும். இதே போன்று திரிக்கப்பட்ட வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் வைரலானது. 

  இந்த என்ஜின்கள் லிக்விட் ஆக்சிஜன் மற்றும் லிக்விட் ஹைட்ரஜன் மூலம் இயங்குகின்றன. இவை மேகக்கூட்டங்கள் போன்று காட்சியளிக்கும் புகையை வெளியிடும். இந்த மேகக்கூட்டங்கள் குளிர்ச்சி அடையும் போது தண்ணீராக மாறி, மழை போன்று பூமியில் விழுகிறது. சோதனையின் போது என்ஜினில் ஏற்படும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப தண்ணீர் அளவு வேறுபடும்.
  Next Story
  ×