என் மலர்

  செய்திகள்

  ராகுல் பதவி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும்- வீரப்ப மொய்லி
  X

  ராகுல் பதவி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும்- வீரப்ப மொய்லி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
  பெங்களூரு:

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, பெங்களூருவில் செய்தியாளரிடம் கூறியதாவது:-

  பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கின்மை அதிகரித்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை கட்சியின் தலைவராக அவர் இருக்கிறார். எனவே கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும்.

  ராகுல் காந்தி உறுதியான தலைவர். தலைவர் பதவியில் இருந்து அவர் விலகும் பட்சத்தில், கட்சியை மறுசீரமைப்பு செய்து விட்டு செல்ல வேண்டும். நேர்மையான, சரியான நபரை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது. ராகுல் அதை அனுமதிக்கக் கூடாது.

  இவ்வாறு மொய்லி கூறினார். 

  வீரப்ப மொய்லியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×